கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றின் ஆய்வகத்தில தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தானது இன்று அதிகாலை 4.45 மணியளவிலேயே இடம்பெற்றுள்ளது.

விபத்தினையடுத்து தீப் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் தீயணைப்பு-கொழும்பு தீயணைப்பு படையினரும், தீயணைப்பு வாகனங்களும் விரைந்து செயற்பட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணங்கள் தெரியாத நிலையில், தீப் பரவலினால் உண்டான சேத விபரங்களும் இன்னும் மதிப்பிடப்படவில்லை.