நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலை மற்றும் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்திற்கான தெற்காசிய நிறுவனம் (SAITM) இன் நிறுவனர் டாக்டர். நெவில் பெர்னாண்டோ கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

ஆரம்பத்தில் அவர் அவரது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தற்போது அவர் ஐ.டி.எச். வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.