இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்காக அவுஸ்திரேலியாவின் டிரேவிஸ் ஹெட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இவர் இன்று அணியுடன் இணைந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

22 வயதான டிரேவிஸ் ஹெட் வலது கை சுழல் பந்துவீச்சாளர் என்பதோடு, துடுப்பாட்ட வீரராகவும் தனது  சகலதுறை திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய வீரராவார்.

இவர் 45 முதற்தர போட்டிகளில் விளையாடி 2663 ஒட்டங்களை பெற்றுள்ளதுடன், பந்துவீச்சில் 14 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

டெஸ்ட் போட்டியை 2-0 என்ற நிலையில் இழந்துள்ள அவுஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றுவதற்காக  அணியில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது.

இதேவேளை இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.