-சி.என்.என்னுக்காக மிச்சல் தோ-
சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாவி தொலைபேசி நிறுவனமானது, சீன நாட்டு இனக்குழுமங்களில் ஒன்றான உய்குர் சமூகத்தினை ஏனைய சமூகத்திலிருந்து அடையாளம் காணும் நோக்கில் முக அங்கீகார முறைக்காக தாக்கல் செய்திருந்த காப்புரிமை விண்ணப்பத்தை முன்னெடுப்பதில் பின்வாங்கிறது.
2018 ஜூலையில் ஹுவாவி மற்றும் அரசாங்கத்துடன் இணைந்த சீன அறிவியல் அகாடமி ஆகியவற்றால் தாக்கல் செய்யப்பட்ட காப்புரிமை விண்ணப்பத்தில், முக அங்கீகார தொழில்நுட்பத்தில் “பாதசாரிகளின் பண்புகளை அடையாளம் காண்பது மிகவும் முக்கியமானது" என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, சமூகங்களின் பண்புக்கூறுகளான பாலினம் (ஆண், பெண்), வயது (இளைஞர்கள், நடுத்தர வயது, வயதானவர்கள்) இனம் (ஹான், உய்குர்) போன்றவாறான விடயங்கள் இருக்கலாம்" என்றும் அந்த விண்ணப்பத்தில் கூறப்பட்டிருந்தது. காணொளிக் கண்காணிப்பு தொழில்நுட்பத்தின் ஊடாக ஒரு சுயாதீன குழுவை கண்காணிக்கும் செயற்பாடே இதுவென பி.பி.சி. செய்தி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
ஹுவாவி செய்தி நிறுவனத்தின் ஊடகப்பேச்சாளர் சி.என்.என்னுக்கு கருத்து வெளியிடுகையில், தமது நிறுவனம் காப்புரிமையை “திருத்துவதாக" இந்த விண்ணபத்தின் ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் மேலும் இன அடையாளம் காணும் அம்சமானது “ஒருபோதும் பயன்பாட்டின் ஒரு பகுதியாக மாறக்கூடாது" என்றும் கூறினார்.
இன பாகுபாட்டைச் செய்வதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் என்ற குற்றச்சாட்டுக்கள் உட்பட அனைத்து பாகுபாட்டு விடயங்களையும் ஹுவாவி எதிர்க்கின்றது என்றும் அவர் மேலும் கூறினார். “புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மிகவும் கவனமாகவும் நேர்மையுடனும் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இதேவேளை, சீனாவில் உள்நாட்டு பாதுகாப்பில் பொலிஸார் முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறிருக்க, மேற்கு பிராந்தியமான சின்ஜியாங்கில், உய்குர் மற்றும் பிற இன முஸ்லிம் சிறுபான்மையினரைச் சேர்ந்த 2 மில்லியன் மக்கள் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த முகாம்களை ‘தொழில் பயிற்சி மையங்கள்’ என்றும் பீஜிங் கூறிவந்தாலும் இதுவொரு ஒடுக்குமுறைகள் நிறைந்த “கலாச்சார இனப்படுகொலை" மையமாகவே இருக்கின்றது என்றும் பரவலாக வர்ணிக்கப்படுகின்றது. இதேவேளை, இணைவழி நெறிமுறை காணொளி சந்தையின் (ஐ.பி.வி.எம்.) அரசியல் விவகாரங்களுக்கான பணிப்பாளராக இருக்கும் கோனார் ஹீலி கூறுகையில், காப்புரிமை விண்ணப்பத்தின் ஒரு பகுதியாக உய்குர் சமூகத்தினை அடையாளம் காணும் அம்சம் ஏன் முதன்முதலில் இருந்தது என்பதை ஹுவாவி விளக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
உய்குர் சமூகத்தினர் காப்புரிமைகளுக்குச் சென்று முக அங்கீகார முறையை உருவாக்குவார்கள் என்பதற்கு என்ன காரணம் இருக்கக்கூடும், யாரோ ஒருவர் என்ன இனம் என்பதைக் கண்டறிய ஒரு கணினியைப் பயிற்றுவிக்கும் மணிநேரங்களையும், கோப்புக்களை தயாரித்து தகவல்களை உள்ளடக்கும் மணிநேரங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மனிதகுலத்திற்கு பயனளிப்பதாக கூறப்படும் இந்த வகையான தொழில்நுட்பத்திற்கு நடைமுறையில் மிகக் குறைவான பயன்பாடுகள் உள்ளன. என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவ்வகையான காப்புரிமைக்கு விண்ணம் செய்த முதல் நிறுவனம் ஹுவாவி மட்டும் அல்ல என்பதும் முக்கியமானதொரு விடயமாகும்.
அத்துடன் சீன தொழில்நுட்ப ஆரம்ப நிறுவனமான மெக்வி 2019 ஜூனில் இத்தகையதொரு காப்புரிமை விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தது. அதிலும் இன வகைப்பாடு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் “ஹான், உய்குர், ஹான் அல்லாத, உய்குர் போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அதுதொடர்பில் மெக்வி நிறுவனமும் சி.என்.என்னுக்கு அளித்த உத்தியோக பூர்வமான அறிவிப்பில் “திரும்பப் பெறுவோம்” என்று கூறியது, அதுமட்டுமன்றி தமது விண்ணப்பமானது “தவறான புரிதலுக்கு திறந்ததாக” இருப்பதாகவும் அத்துடன் மெக்வியானது இனங்களை, அல்லது இன முத்திரைகளை ஏற்படுத்தும் வகையில் விற்பனைகள் நடைபெறாது என்றும் அந்த அறிக்கையில் உத்தரவாதம் வழங்கப்பட்டது.
இதேவேளை, சீனாவின் மற்றொரு தொழில்நுட்ப நிறுவனமான, சென்ஸ்டைம், 2019 ஜூலையில் ஒரு காப்புரிமை விண்ணப்பத்தில் சமர்ப்பித்திருந்தது. இது மக்களை இனத்தால் அடையாளம் காண முடியும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, “உய்குர்" சமூகத்தினை அடையாளம் காண்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் அதில் குறிப்பிட்டிருந்தது.
எமது விண்ணப்பத்தில் உய்குர்ஸைப் பற்றிய குறிப்பு “வருந்தத்தக்கது". இது தொழில்நுட்ப வழிமுறைகளை அங்கீகரிக்கும் பண்புகளை வெளிப்படுத்தியதாக இருக்கும் என்பதோடு பயன்பாட்டில் உள்ள எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும்" என்று அந்நிறுவனமும் சி.என்.என்னுக்கு வழங்கிய உத்தியோகபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் எந்தவகையிலும் பாகுபாடு காண்பிப்பதற்காக வடிவமைக்கப்படவில்லை அவ்விதமான நோக்கத்தினையும் கொண்டிருக்கவில்லை, இது எங்கள் மீதான மதிப்புகளுக்கு எதிரானது, எமக்கான அடுத்த வாய்ப்பில் காப்புரிமையை நாங்கள் புதுப்பிப்போம் என்றும் அப்பதிலில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, டிசம்பரில், அலிபாபா நிறுவனமானது இணைவழி நெறிமுறை காணொளி சந்தையின் (ஐ.பி.வி.எம்.) ஒரு பிரிவினருக்கு முக அங்கீகார முறையில் எவ்வாறு உய்குர்களைக் கண்டறிய முடியும் என்பதைக் காண்பித்ததாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ‘இனத்தால் முகங்களை அடையாளம் காண முயற்சிக்க மாட்டேன் என்று அலிபாபா நிறுவனம் தெரிவித்திருந்தது.
அதே மாதத்தில், அவாஷிங்டன் போஸ்ட், கமரா அமைப்புகளால் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் கண்டறியப்பட்டால், அரசாங்க அதிகாரிகளுக்கு தானியங்கி மூலம் அடையாளங்களை அனுப்பும் திறன் கொண்ட முக அங்கீகார மென்பொருளை ஹுவாவி பரிசோதனை குற்றம் சாட்டியது.
அந்த நேரத்தில், ஹுவாவி “தங்கள் குழுமத்தால் மக்களை அடையாளம் காணும் அமைப்புகளை உருவாக்கவோ, பரிசோதிக்கவோ விற்பனை செய்யவோ இல்லை" என்று மறுத்துவிட்டது.
“எந்தவொரு சமூகத்தின் உறுப்பினர்களுக்கும் பாகுபாடு காட்டவோ அல்லது ஒடுக்கவோ எங்கள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை நாங்கள் முயற்சிக்கவில்லை என்றும்” என்று ஹுவாவி நிறுவனம் தனது இணையவழி அறிக்கையில் தெரிவித்தது.
அதேவேளை, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் சின்ஜியாங்கில் நெருக்கடிகளில் கட்டாய தொழிலாளர் முகாம்களுடன் இணைக்கப்படக்கூடிய நிறுவனங்களுக்கு அழுத்தங்களை வழங்கி வருகின்றன. அமெரிக்க அரசாங்கம் அனைத்து பருத்தி மற்றும் தக்காளி பொருட்களையும் சின்ஜியாங்கிலிருந்து இறக்குமதி செய்வதை தடை செய்வதாக அண்மையில் அறிவித்தது. அதற்கொரு நாள் முன்னதாக இங்கிலாந்து அரசாங்கம் சின்ஜியாங்குடன் பொருளாதார தொடர்புகளை மறைக்கும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் என்றும் அறிவித்தது.
இணைவழி நெறிமுறை காணொளி சந்தை (ஐ.பி.வி.எம்.) தனது சமீபத்திய அறிக்கைக்காக எழுதப்பட்ட பகுப்பாய்வில், உயர்மட்ட சீன தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான காப்புரிமை விண்ணப்பங்களில் ‘உய்குர்’ கண்காணிப்பைச் சேர்ப்பது நாட்டில், இனவெறி தொழில்நுட்பம் எவ்வளவு பரவலாக உள்ளது" என்பதைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் சீனாவில் முன்வைக்கப்படும் இத்தகைய காப்புரிமை விண்ணப்பங்கள், உய்குர் மக்களுக்கு எதிரான மக்கள் சீனக் குடியரசின் மனித உரிமை மீறலுக்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டு, என்றும் மேலும் இது பரந்த காணொளி கண்காணிப்புத் துறையின் நற்பெயருக்கு ஏற்படவுள்ள நீண்டகால ஆபத்தையும் பிரதிபலிக்கிறது மேலும் தெரிவித்துள்ளது.
-தமிழில் ஆர்.ராம் -
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM