இலங்கையில் இன்று செவ்வாய்க்கிழமை 18 மாத ஆண் குழந்தை உட்பட 7 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதற்கமைய மரணங்களின் எண்ணிக்கை 330 ஆக உயர்வடைந்துள்ளது.

கொழும்பு 2 பகுதியைச் சேர்ந்த 18 மாத ஆண் குழந்தையே இவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது.

வெலிகம பகுதியைச் சேர்ந்த 67 வயதான பெண்ணொருவரும், கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 82 வயதான பெண்ணொருவரும், வத்தேக பகுதியைச் சேர்ந்த 73 வயதான பெண்ணொருவரும்,நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 80 வயதான பெண்ணொருவரும், கெலி ஓயா பகுதியைச் சேர்ந்த 77 வயதான பெண்ணொருவரும், ராகம பகுதியைச் சேர்ந்த 32 வயதான கயான் தன்த்தநாராயண என்ற வைத்தியருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை 715 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 65,698 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 59,043 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு 6,325 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.