பழம்பெரும் திரைப்பட நடிகை ஜோதிலட்சுமி (68) உடநலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார்.

1963ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்த பெரியஇடத்துப் பெண் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஜோதிலட்சுமி. அதன் பின்னர் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்கள் ஏற்று நடித்திருக்கிறார். ஜோதிலட்சுமி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முத்து, சேது என தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். நடனம் மற்றும் நடிப்பில் திறமையானவராக விளங்கியவர். இவர் பிரபல கவர்ச்சி நடிகை ஜெயமாலினியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. 

தகவல் : சென்னை அலுவலகம்