மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை(31) மதியம் கடற்தொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் இன்று வரை கரை திரும்பவில்லை என இன்று செவ்வாய்க்கிழமை (2) மதியம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மன்னார் கொண்னையன் குடியிறுப்பு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.கொட்வின் (வயது-38) மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர்.கண்ணன் (வயது-55), எஸ்.பாண்டியன் (வயது-23) ஆகிய மூன்று மீனவர்களே இவ்வாறு காணமல் பேயுள்ளதாக தெரிய வருகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் ஓலைத்தொடுவாய் கடற்கரையில் இருந்து குறித்த 3 மீனவர்களும் தூண்டில் மூலம் மீன் பிடிக்க படகு ஒன்றில் தொழிலுக்குச் சென்ற நிலையில் இன்று வரை கரை திரும்பவில்லை என தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த மீனவர்களின் உறவினர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (2) மன்னார் பொலிஸ், மாவட்;ட அரசாங்க அதிபர், கடற்தொழில் திணைக்களம் மற்றும் கடற்படை ஆகியோரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் கடற்படையினர் கடலில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது வரை மீனவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM