82 நாடுகளில் பரவியுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் - உலக சுகாதார ஸ்தாபனம்

Published By: Gayathri

02 Feb, 2021 | 03:44 PM
image

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் 82 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இங்கிலாந்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸானது கண்டறியப்பட்டது. 

இதனால், இந்தியா உட்பட பல சர்வதேச நாடுகள் அந்நாட்டுடனான தங்களது விமான போக்குவரத்து சேவைக்கு தற்காலிக தடை விதித்தன.

இந்த புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸானது எளிதில் பரவும் தன்மை கொண்டது என கண்டறியப்பட்டது.  

இதனால், இங்கிலாந்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளை மீண்டும் கடுமையாக பின்பற்றுமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசரநிலை திட்டத்திற்கான தொழில் நுட்ப தலைவர் மரியா வான் கெர்கோவ் ஆலோசனை கூட்டமொன்றில் கலந்து கொண்டார்.  

அங்கு அவர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இங்கிலாந்து நாட்டில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட உருமாறிய வகையை சேர்ந்த கொரோனா பாதிப்பு 82 நாடுகளில் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.

தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட  மற்றொரு வகை கொரோனா பாதிப்பு 39 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளன.  

இதேபோன்று பிரேசில் நாட்டில் இருந்து கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பு 9 நாடுகளில் பரவியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17