மூன்று உதவியாளர்களுடன் 'கிம்புலா எலா குணா' சென்னையில் கைது

Published By: Vishnu

02 Feb, 2021 | 11:46 AM
image

தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாக கூறப்படும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான 'கிம்புலா எலா குணா' என அழைக்கப்படும் சின்னையா குணசேகரன் இந்தியாவின் சென்னையில்‍ கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்திலிருந்து டில்லிக்கு புறப்படுவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டபோது அவரும், அவரது மூன்று உதவியாளர்களும் ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்திற்கு தப்பிச் செல்வதற்கு முன்பு, குணா இலங்கையில் ஒரு பெரிய போதைப்பொருள் வியாபாரி ஆவார். 

1999 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவை கொலைசெய்வதற்கான தமிழீழ விடுதலை புலிகளின் தோல்வியுற்ற முயற்சியில் அவர் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.

அதன் பின்னர் அவர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து தமிழகத்துக்கு தப்பிச் சென்றார்.

எவ்வாறெனினும் ஞாயிற்றுக்கிழமை உளவுத்துறையின் தகவல் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட இவர்கள் தற்போது தடுப்புக் காகவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34