பாகிஸ்தானின், குவாடரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தை சர்வதேச கிரிக்கெட் (ஐ.சி.சி) திங்களன்று பாராட்டியுள்ளது.

ஏனைய அனைத்து கிரிக்கெட் மைதானங்களை விடவும் பலூசிஸ்தானில் உள்ள குவாடர் மைதானம் அழகாகவுள்ளதாக தெரிவித்துள்ள ஐ.சி.சி. இதன் அழகினை வேறு எந்த மைதானத்தினாலும் கொண்டுவர முடியாது என்றும் சவால் விடுத்தது.

இருப்பினும், பாகிஸ்தான் கிரிக்கெட் மைதானத்திற்கான பாராட்டு ஐ.சி.சி உடன் உடன்படாத சில இந்தியர்களை சமூக ஊடகங்களில் விமர்சனங்களை முன்வைத்தனர்.

குறிப்பாக தர்மஷாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தை படங்களை வெளியிட்டு, இது ஒரு அழகியதை விட அழகாக இருக்கிறது என்று வாதிட்டனர்.