ஆண்களில் அதிலும் குறிப்பாக வயதானவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சிறுநீரை அடக்க இயலாது. இத்தகைய பாதிப்பிற்கு தற்போது புதிய சிகிச்சை கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

எம்மில் பலரும் இயல்பான முறையில் சிறுநீர் கழிக்காமல் அதிக முறை சிறுநீரை வெளியேற்றுவார்கள். இந்த பாதிப்பு ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிகம் ஏற்படும். தற்போது வயதான ஆண்களுக்கு அவர்களின் புராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் தீங்கற்ற திசு கட்டி ( benign prostatic hyperplasia) யினால் அவர்களால் சிறுநீரை அடக்க முடிவதில்லை. 

பொதுவாக எம்முடைய சிறுநீர்ப்பையில் 400 மில்லி அளவிற்கு சிறுநீரை தேக்கி வைத்துக் கொள்ள இயலும். இதற்கு மேல் சிறுநீர் சேர தொடங்கினால், மூளை அனிச்சையான உத்தரவை பிறப்பித்து சிறுநீரை வெளியேற்றும். ஆனால் சிலருக்கு சிறுநீர் பையில் 200 மில்லி அளவிற்கு சிறுநீர் சேகரிக்கப்பட்ட உடனேயே அதனை வெளியேற்ற வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். 

அவர்கள் சிறுநீரை வெளியேற்றி பிறகும் மீண்டும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு எழும். சிலருக்கு சிறுநீர் கழித்த பிறகு இறுதி நிலையில் துளித்துளியாக சிறுநீர் வெளியேறும். இத்தகைய பாதிப்பை overactive bladder என மருத்துவர்கள் வகைப்படுத்துவார்கள். இதற்கு தற்போது முழுமையான நிவாரணமளிக்கும் மருந்துகள் இருந்தாலும் சிலருக்கு அவர்கள் எதிர்பார்க்கும் நிவாரணத்தை வழங்குவதில்லை.

இந்நிலையில் இத்தகைய பாதிப்பை குறைப்பதற்கு டாம்சுலோசின் தெரபி ( Tamsulosin Therapy) எனப்படும் சிகிச்சை கண்டறியப்பட்டிருக்கிறது. குறுகிய காலகட்டத்திற்குள் வழங்கப்படும் இந்த சிகிச்சையால் அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது தடுக்கப்படுகிறது.

டொக்டர் குரு பாலாஜி.

தொகுப்பு அனுஷா.