ரியோ ஒலிம்பிக்கில் நேற்று இடம்பெற்ற போட்டிகளில் பங்கேற்ற இலங்கை, பங்கேற்ற மூன்று போட்டிகளிலும்  தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.

ஆண்களுக்கான 62 கிலோகிராம் எடைப்பிரிவில் பழு தூக்கல் போட்டியில் பங்கேற்ற என்டன் சுதேஷ் பீரிஸ் குருகுலசூரிய போட்டியை நிறைவுசெய்யாமல் வெளியேறினார்.

இந்நிலையில் 10 மீற்றர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற இலங்கை வீரர் மங்கள சமரகோன் 50 ஆவது இடத்தை பெற்று போட்டியிலிருந்து வெளியெறினார்.

இதேவேளை ஒலிம்பிக் ஜுடோ போட்டியில் பங்கேற்ற ரிப்பியல்லகே சமீர  9 இடத்தை பெற்று வெளியேறினார்.