இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிந்தோரின் எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, இன்று திங்கட்கிழமை 07 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று பதிவான மரணங்கள்

பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஆண்ணொருவர், தனது வீட்டிலேயே நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

வத்தளை பகுதியைச் சேர்ந்த 75 வயதான பெண்ணொருவர் நேற்று முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஆண்ணொருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

நுகேகொடை பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆண்ணொருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆண்ணொருவர், கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

மடவல பகுதியைச் சேர்ந்த 73 வயதான பெண்ணொருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

கெலிஓயா பகுதியைச் சேர்ந்த 77 வயதான ஆண்ணொருவர், தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார்.