புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகளுக்கமைய மாணவர்களை  இணைப்பது குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

Published By: Digital Desk 4

01 Feb, 2021 | 08:31 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகளுக்கமைய மாணவர்களை பிரபல பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை ஒருமாத காலத்துக்கு பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் கடந்த மாதம் 15 ஆம் திகதி வெளியாகியிருந்தன.

எவ்வாறாயினும், வெளியிடப்பட்டிருக்கும் வெட்டுப்புள்ளிகள் எந்த அடிப்படையும் இல்லாமல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்றிருக்கும் முறைப்பாட்டுக்கமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெறும் மாணவர்களை பிரபல பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ள வெளியிடப்பட்டிருக்கும்  வெட்டுப்புள்ளிகள் வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு நியாயத்தை நிலைநாட்டவேண்டும் என தெரிவித்து பாடசாலைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் மேற்கொண்டிருந்தது.

இதன்போது அவர்கள்  இந்த முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்கள் மிகவும் சிரமத்துக்கு மத்தியிலேயே முகம்கொடுத்திருந்தனர். புலமைப்பரிசிலுக்கான வெட்டுப்புள்ளியும் 169 வரை அதிகரித்திருந்தது. அத்துடன் பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளியும் 190 முதல் 195வரை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. 

அதனால் பரீட்சையில் 180 புள்ளிகளை பெற்றுக்கொண்ட மாணவர்கள்கூட கொழும்பில் பிரபல பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19