பலாங்கொடை – கல்தொட்ட பகுதியில் நீரில் மூழ்கி 16 வயதான மாணவியொருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் இன்றையதினம் பலாங்கொடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இந்நிலையிலேயே அவரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வாரம் வளவை கங்கையில் நீராடச் சென்ற மாணவியொருவர் உயிழந்துள்ளதுடன் மேலும் 12 மாணவர்களும் அவருடன் இணைந்து நீராடச்சென்றுள்ளனர்.

குறித்த ஆசிரியர் அதிபரிடமோ அல்லது வலயக்கல்வி பணிப்பாளரிடமோ அனுமதி பெறாமல் மாணவர்களை, வெளியில் அழைத்துச் சென்றமைக்காக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.