(க.கிஷாந்தன்)

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை நகரத்தில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் கட்டவுட் இனந்தெரியாத நபர்களால் நேற்றிரவு கிழிக்கப்பட்டுள்ளதாக நகரத்திற்கு பொறுப்பான திம்புள்ள – பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைபாட்டினை தொழிலாளர் தேசிய சங்கத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான ஆர்.சிவகுமார் பதிவு செய்துள்ளார்.

இவ்வாறு கிழிக்கப்பட்ட கட்டவுட்டில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களான அமைச்சர்களுடைய உருவப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து திம்புள்ள – பத்தனை பொலிஸார் நகரத்தில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.