(செ.தேன்மொழி)

தலங்கம பகுதியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிம்புலாவல மற்றும் தலவத்துகொட ஆகிய பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட ஐந்து மணிநேர சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 26 - 44 வயதுக்கிடைப்பட்ட நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 140 கிராம் ஐஸ் போதைப் பொருளும் , 13 கிராம் 800 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.