வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜெயவர்தன கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவர் நேற்றைய தினம் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையிலேயே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது அவர் ஒரு மருத்துவ நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதுடன், வர்த்தக அமைச்சில் உள்ள அவரது அலுவலக அறை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதேவேளை அவருடன் தொடர்புகளை பேணியதன் காரணமாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவும் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அந்த சோதனை முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.