நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மக்களின் இயல்பு வாழ்க்கை, தற்போது வழமைக்கு திரும்பி வருகிறது. 

இந்நிலையில், கம்பஹா மாவட்டத்திலுள்ள 590 பாடசாலைகளில் 589 பாடசாலைகளையும், களுத்துறை மாவட்டத்திலுள்ள 446 பாடசாலைகளில் 442 பாடசாலைகளையும், எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக மீள ஆரம்பிக்க முடியுமென பிரதேச தொடர்புக் குழு கல்வி அமைச்சிற்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளது.

இந்நிலையில், குறித்த பிரதேசங்களில் பாடசாலைகளை ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதார பணிப்பாளர் நாயகத்திடம் கல்வி அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.சற்று முன்னர், கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இம்முடிவை அறிவித்திருந்தார். அத்தோடு, கொழும்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது குறித்து இவ்வார இறுதியில் தீர்மானமொன்று வெளியிடப்படும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.