பேருவளை பிரதேசத்தில் 16 வயதுடைய சகோதரன் ஒருவர் தனது  8 வயதுடைய தங்கையை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பிற்கிணங்க பேருவளை பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த நபர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது தன்னுடைய கையடக்கத் தொலைபேசியில் ஆபாச வீடியோக்களை காட்டி தன் தங்கையை ஒருவருட காலமாக  தொடர்ச்சியாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து குறித்த தொலைபேசியை  பொலிஸார் கைப்பற்றியதுடன், பாதிக்கப்பட்ட சிறுமி நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.