சீன ஆட்சி நகரமான ஹொங்கொங்கின் மினி-அரசியலமைப்பு மற்றும் அரசாங்கத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் கையொப்பமிடுவதற்கு நான்கு வாரங்கள் இருப்பதாகக் 180,000 அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் பெய்ஜிங் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியதை அடுத்து இவ்விதமான உறுதிப்படுத்தலை அளிக்க வேண்டிய அவசியம் ஹொங்கொங் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஹொங்கொங்கில் உள்ள உலகளாவிய நிதி மையத்திலிருந்து 4,ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஏற்கனவே அரசியலமைப்பு மற்றும் அரசாங்கத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் உத்தியோக பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அவ்வாறிருக்கையில், சீனாவின் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டமானது, அடிபணிதல், பிரிவினைவாதம், பயங்கரவாதம் அல்லது வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டு என்று கருதுபவர்களை சிறைப்படுத்தல் உள்ளிட்ட தண்டனைகளை சுட்டிக்காட்டுகின்றது.
அதேநேரம், சீன ஆட்சியில் உள்ள ஹொங்கொங் நகரத்தில் மாற்றுக்கருத்துக்களை நசுக்குவதற்கு புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் பயன்படுத்தப்படுவதாக மேற்கத்திய அரசாங்கங்களும், உரிமைகள் சார்ந்த குழுக்களும் கவலை கொண்டுள்ளன.
ஹொங்கொங் மற்றும் பெய்ஜிங்கில் உள்ள அதிகாரிகள், ஒரு வருட அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னரும் பகுதி அளவான தன்னாட்சி பெற்ற முன்னாள் பிரிட்டிஷ் காலனியான ஹொங்கொங்கில் ஸ்திரத்தன்மையைக் ஏற்படுத்துவதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டம் அவசியம் என்று கூறுகிறார்கள்.
சத்தியப்பிரமாணம் செய்யும் அரசு ஊழியர்கள் ஹொங்கொங்கின் அடிப்படை சட்டத்தை நிலைநிறுத்துவதாகவும், நகரத்துக்கும் அதன் அரசாங்கத்துக்கும் “விசுவாசத்தை காப்பதற்காகவும்" உறுதியளிப்பார்கள், அத்துடன் தங்கள் கடமைகளில் அர்ப்பணிப்புடன் இருப்பார்கள் என்றும் கூறுகின்றார்கள்.
அதேநேரம், சிவில் சேவை பணியகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், அனைத்து அரசு ஊழியர்களும் “இந்த அடிப்படைக் கடமைகளை எந்த நிச்சயமற்ற விதிமுறைகளிலும் ஏற்றுக் கொள்ளக் கூடாது" என்று கூறியிருக்கின்றது.
உறுதிமொழியில் கையெழுத்திட மறுப்பவர்கள் வேலை இழக்க நேரிடும் என்றும் “சத்தியப்பிரமாணம் செய்வதற்கு அலட்சியம் அல்லது மறுப்பு அல்லது ஒரு அரசு ஊழியரின் அறிவிப்பை முறையாக கையொப்பமிட்டு திருப்பி அனுப்புவது அடிப்படைக் கடமைகளை ஏற்றுக்கொள்வதற்கான அவரது விருப்பமாகும். அத்துடன் மற்றும் சிவில் சேவையில் நீடிப்பதற்கான அவரது தகுதியின் மீது கடுமையான சந்தேகங்களை ஏற்படுத்துகிறது" என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
கடந்த கால தேர்தல்களில் எதிர்க்கட்சி வேட்பாளர்களையும், ஜனநாயக சார்பு சட்டமியற்றுபவர்களையும் அதிகாரிகள் தகுதி நீக்கம் செய்துள்ளனர். இதேபோன்று நம்பிக்கை உறுதிமொழிகள் “நேர்மையற்றவை" என்ற அடிப்படையிலும் அவ்விதமான நிகழ்வுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் இல்லாமில்லை.
அரசு ஊழியர்களுக்கான சுற்றறிக்கையில், அனைத்து வகையான முறையற்ற நடத்தைகளை “முழுமையாக" பட்டியலிடுவது சாத்தியமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஏனெனில் அவை பல வடிவங்களில் வரக்கூடும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்
எவ்வாறாயினும் “ஹொங்கொங் சுதந்திரத்தை" ஆதரிப்பது அல்லது அந்த நகரத்தின் மீதான சீனாவின் இறையாண்மையை அங்கீகரிக்க மறுப்பது, நகர விவகாரங்களில் வெளிநாட்டு அல்லது வெளி சக்திகளின் தலையீட்டைக் கோருவது அல்லது தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.
அதுமட்டுமன்றி ஹொங்கொங்கின் நிர்வாகத்தினையும் அந்த அரசாங்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட “எந்தவொரு செயலும் இந்த அறிவிப்பை மீறுவதாகக் கருதப்படும் என்றும் அதன் சுற்றறிக்கை கூறியிருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட கொள்கையை அல்லது அரசாங்கத்தின் முடிவை எதிர்ப்பதற்காக பொதுவில் கருத்துக்களை வெளியிடுவது முறையற்ற நடத்தை அல்ல என்று ஹொங்கொங் அரசாங்கம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏ.எஸ்.ஐ.ஏ செய்திச்சேவை (தமிழில்: ஆர்.ராம்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM