அம்பாறை - தமண பிரதேசத்தில் அம்பலன் ஓயா பகுதியில் தாயும் பிள்ளையும் வெட்டுக்காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்தே இன்று காலை தாயும் பிள்ளையும் வெட்டுக்காயங்களுடன் இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட தாய்  33 வயதுடையவரெனவும் பிள்ளையின் வயது 13 எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதுடன் குறித்த இருவரும் கூரிய ஆயுதத்தால் தக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.