(செ.தேன்மொழி)

போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சிறைவைக்கப்பட்டுள்ள 'பொடி லெசியின் ' சகா ஒருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீட்டியாகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்வத்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்டியாகொட - தெல்வத்த பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர் தங்கியிருந்த வீட்டின் கூரைப்பகுதியிலிருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மீட்டியாகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.