சுயதனிமைப்படுத்தல் விதிகளை மீறுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை: அஜித்ரோஹண

Published By: J.G.Stephan

31 Jan, 2021 | 06:02 PM
image

(செ.தேன்மொழி)
சுயதனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் தொடர்பில் கண்காணிப்பதற்காக பொலிஸார் சிவில் உடையில் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்போது சுயதனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்கள் இனங்காணப்பட்டால், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இதுத் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் சட்டவிதிகளை முறையாக பின்பற்றுவதில்லை என தெரியவந்துள்ளது. சுயதனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் வெளிபிரதேசங்களுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படாத போதிலும், சிலர் அதற்கு முரணாக வெளிபிரதேசங்களுக்கு செல்வது தெரியவந்துள்ளது. அதனால் இவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக பொலிஸார் சிவில் உடையில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்போது சட்டவிதிகளுக்கு புறம்பாக வெளிபிரதேசங்களுக்கு செல்லும் நபர்கள் மற்றும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களின் இல்லங்களுக்கு செல்லும் வெளிநபர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 2,905 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உறுதி...

2024-06-13 22:29:31
news-image

ரணிலின் வேலைத்திட்டமே சர்வதேச நாணய நிதியத்தின்...

2024-06-13 16:48:39
news-image

பயங்கரவாதிகள் போல் செயற்படுவதை எதிர்க்கட்சிகள் தவிர்க்க...

2024-06-13 16:54:47
news-image

கிராம உத்தியோகத்தர்களின் புதிய சேவை யாப்புக்கு...

2024-06-13 20:54:34
news-image

நாளை 2 மணிக்குள் சாதகமான பதிலின்றேல்...

2024-06-13 17:35:08
news-image

நுவரெலியாவில் உடலின் கீழ் பகுதி இல்லாமல்...

2024-06-13 20:19:38
news-image

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய...

2024-06-13 19:53:18
news-image

இரு முச்சக்கர வண்டிகள் நேருக்குநேர் மோதி...

2024-06-13 19:07:27
news-image

அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த...

2024-06-13 17:36:34
news-image

மன்னாரிலும் தபால் தொழிற்சங்கத்தினர் சுகயீன போராட்டம்

2024-06-13 17:34:27
news-image

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி...

2024-06-13 17:33:18
news-image

தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை நாட்டிற்கு...

2024-06-13 17:27:50