பூண்டுலோயாவில் கோர விபத்து -  இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு

Published By: Digital Desk 4

31 Jan, 2021 | 03:18 PM
image

பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூண்டுலோயா - கம்பளை பிரதான வீதியில் நியங்கந்தர பகுதியில் இன்று (31.01.2021) மதியம் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

கொத்மலையிலிருந்து பூண்டுலோயா பகுதியை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் பூண்டுலோயா பகுதியிலிருந்து கம்பளை பகுதிக்கு சென்ற கனரக லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் இராவணாகொடை கலப்பிட்டியவில் வசிக்கும் சந்தருவன் ரணசிங்க (வயது - 19) மற்றும் என்.ஜீ.தினேஷ் (வயது – 19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின் போது,

ஐந்து மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் குழு ஒன்று சுற்றித் திரிந்ததாகவும், அந்த சுற்றி திரிந்த குழுவில் ஒரு சைக்கிளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாகவும் தெரிவித்த பொலிஸார், மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞனின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் கனரக லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாவலப்பிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் பூண்டுலோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது...

2026-08-08 14:56:36
news-image

இரத்மலானையில் ஆயுதங்கள், கைக்குண்டு மற்றும் பணத்துடன்...

2026-08-08 14:36:20
news-image

பதுளையில் புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில்...

2026-08-08 13:20:57
news-image

உயர்தர பரீட்சார்த்திகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்...

2026-08-08 13:56:21
news-image

இலங்கை தபால்துறையை நவீனமயப்படுத்துதல் குறித்த கலந்துரையாடல்

2026-08-08 13:51:43
news-image

கட்டானையில் 75 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன்...

2026-08-08 13:20:07
news-image

கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் நான்கு ஏக்கர்...

2026-08-08 13:47:48
news-image

கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை: மீனவ சமூகத்திற்கு...

2026-08-08 13:13:25
news-image

நாடு தழுவிய சோதனைகளில் 431 தரமற்ற...

2026-08-08 13:05:24
news-image

தொம்பகஹவெல - பஹதராவ குளத்தில் நீராடச்...

2026-08-08 12:48:03
news-image

இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள்...

2026-08-08 11:54:45
news-image

பல கடற்பகுதிகளுக்கு 'சிவப்பு' மட்ட எச்சரிக்கை!

2026-08-08 11:22:51