கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹராவின், முதலாவது கும்பல் பெரஹராவை கண்டுகளித்துகொண்டிருந்தவர்கள் மீது கட்டிடமொன்றிலிருந்து ஜன்னலொன்று உடைந்து விழுந்ததில் 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த 4 பேரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு வீதியில், கட்டமொன்றுக்கு கீழுள்ள நடைபாதையில், அமர்ந்திருந்து பெரஹராவை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மீது, அக் கட்டடத்தின் ஜன்னலொன்று உடைந்து விழுந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் குறித்த கட்டிடத்தின் உரிமையாளரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.