அவுஸ்திரேலிய ஓபனுக்கான தனிமைப்படுத்தல் நிலையங்களில் இன்னும் 15 நபர்கள் மாத்திரம் எஞ்சியுள்ளனர்.

இதில் முன்னதாக கொரோனா தொற்றுக்கு சாதகமான சோதனை செய்த ஒரு வீரரும், ஏனைய இருவரும் அடங்குவர் என்று மெல்போர்ன் சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.

மெல்போர்ன் மற்றும் அடிலெய்டில் 1,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் அவர்களது பரிவாரங்கள் சனிக்கிழமை நள்ளிரவுக்குள் தமது 14 நாள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்துள்ளனர்.

விடுவிக்கப்பட்ட அவர்கள், கிராண்ட்ஸ்லாம் போட்டிக்கான ஆயத்தங்களை தொடங்கியுள்ளனர்.

இந் நிலையில் விக்டோரியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை 29 ஆவது நாளாகவும் புதிதாக உள்ளூர் நோயாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை.