(ஆர்.ராம்)
புதிய அரசியலமைப்புக்கான வரைவினைத் தயாரிக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான நிபுணர் குழுவினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதி சந்திக்கவுள்ளது.

இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உறுதிப்படுத்தினார்.

அத்துடன், நிபுணர்குழு எம்மைச் சந்திப்பதற்கான நேர ஒதுக்கீட்டைக் கோரியிருந்தது. கூட்டமைப்பின்  தலைவர் சம்பந்தன் திருகோணமலையில் தங்கியிருந்தமையால் முன் கூட்டிய சந்திப்பு பிற்போடப்பட்டு தற்போது 20ஆம் திகதி காலை 10.30 மணியளவில் சந்திப்பதற்கு தீர்மானிக்கப்படவுள்ளது என்றர்.

இதேவேளை, புதிய அரசியலமைப்புக்கான வரைவினைத் தயாரிக்கும் நிபுணர் குழுவானது, பிரதான அரசியல் கட்சிகளுடன் தனித்தனியான சந்திப்புக்களை நடாத்தி கருத்தறியும் செயற்பாட்டினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.