நாட்டில் கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 63,000 ஐ கடந்துள்ளது.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை 848 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 63,293 ஆக உயர்வடைந்துள்ளது.

இவர்களில் 56,277 பேர் குணமடைந்துள்ளதோடு, 6,703 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று சனிக்கிழமை மேலும் 8 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதற்கமைய நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் 313 ஆக உயர்வடைந்துள்ளது.