logo

புதிய 'கிளிப்பிங் கருவி' அம்சத்தை பரிசோதிக்கும் யூடியூப்

Published By: Digital Desk 3

30 Jan, 2021 | 08:27 PM
image

அமெரிக்க ஒன்லைன் வீடியோ பகிர்வு தளமான யூடியூப் ஒரு புதிய சோதனை அம்சத்தை சிறிய படைப்பாளர்களுக்கு வெளியிடவுள்ளது.

குறித்த புதிய அம்சத்தின் மூலம் பயனர்களை் வீடியோக்கள் மற்றும் நேரலை வீடியோக்களின் தருணங்களைப் பிடிக்கவும் பகிரவும் அனுமதிக்கிறது.

'மாஷபல்' என்ற இணையதளத்தின் கருத்துப்படி, சோதனை நேரலையில் சேனல்களில் ஒரு சோதனை கிளிப்பிங் கருவி தெரியும்.

பயனர்கள் அந்த கருவியைக் கிளிக் செய்து, அவர்களின் வீடியோக்கள் மற்றும் நேரலை வீடியோக்களின் ஐந்து வினாடி முதல் அறுபது வினாடிகள் வரை தேர்வு செய்யலாம்.

ஸ்லைடரை (slide) இழுப்பதன் மூலம் அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் கிளிப்பின் நீளத்தை சரிசெய்யலாம்.

ஒரு கிளிப்பை உருவாக்கிய பிறகு, ஒரு புதிய URL, உட்பொதி குறியீடு, உரை அல்லது மின்னஞ்சல் வழியாக ஒரு தலைப்பை பல்வேறு தளங்களில் சேர்க்கலாம் மற்றும் பகிரலாம்.

இதன் விளைவாக வரும் கிளிப் புதிய வீடியோவுக்கு வழிவகுக்காது, ஆனால் அசல் வீடியோவில் மீண்டும் மீண்டும் வளையத்தில் மட்டுமே இயக்க முடியும். அசல் உள்ளடக்கம் அகற்றப்படும்போது கிளிப் நீக்கப்படும் என்பதே இதன் பொருள்.

கிளிப்பிங் அதிகமான பயனர்களால் கோரப்பட்ட கருவி என்று யூடியூப்பில் கேமிங் மற்றும் வர்த்தகத்தின் தலைவரான ரியான் வியாட் குறிப்பிட்டார்.

முன்கூட்டியே பெற்றுக்கொள்பவர்களின் பின்னூட்டத்தின் அடிப்படையில் கிளிப்களுக்கான புதுப்பிப்புகளை வெளியிடுவதாகவும் யூடியூப் உறுதியளித்தது.

இந்த சோதனை அம்சம் யூடியூபின் நேரலை வீடியோக்களின் சேவையான ட்விட்சில் இதேபோன்ற திறனைப் பெற்றுள்ளது.

இப்போதைக்கு, இது டெஸ்க்டாப் மற்றும் அண்ட்ரோய்டில் கிடைக்கிறது, விரைவில் ஐஓஎஸ் இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக 'மாஷபல்' என்ற இணையதளம் கருத்து வெளியிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரே எண்ணை 4 கையடக்க தொலைபேசிகளில்...

2023-04-26 10:31:21
news-image

டுவிட்டர் சமீபத்தில் மேற்கொண்ட மாற்றங்கள் ரஸ்யா,...

2023-04-25 16:19:24
news-image

டுவிட்டரின் லோகோவை மாற்றினார் எலான் மஸ்க்

2023-04-04 16:58:32
news-image

சட்ஜிபிடி போன்ற எழுதும் கருவிகளே கற்றலின்...

2023-03-27 10:17:06
news-image

கொலம்பியாவில் பணயக் கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டிருந்த 78...

2023-03-06 11:27:05
news-image

போலி ChatGPT செயலி குறித்து வல்லுநர்கள்...

2023-02-24 12:52:35
news-image

அதிமுக பொதுக்குழு வழக்கு – உச்சநீதிமன்றம்...

2023-02-23 11:30:56
news-image

இனி நாமும் பெறலாம் ‘ப்ளூ டிக்’

2023-02-22 17:52:27
news-image

பேஸ்புக், இன்ஸ்டாவில் ப்ளூ டிக் பெற...

2023-02-20 09:54:23
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் போட்டி

2023-02-08 13:05:35
news-image

இலங்கை உட்பட ஏனைய நாடுகளில் அதிக...

2023-02-01 12:29:55
news-image

சீனா கொவிட் - பிரபலங்கள் மரணம்...

2023-01-06 13:10:35