பதுளை மாநகர பொது சுகாதாரப்பரிசோதகர் குழுவினரால் இன்று ( 30-01-2021 ) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு சோதனையில் 27 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பதுளை பிரதான பஸ் நிலையம், அஞ்சல் அலுவலகம் , அரசினா் வைத்தியசாலை போன்ற இடங்களில் பதுளை மாநகர பொது சுகாதாரப்பரிசோதகர் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே முகக்கவசம் அணியாத 27 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கொவிட் 19 தொற்று தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாத படியினாலேயே கைது செய்யப்பட்டிருந்தனா். 

அத்தகையவர்களுக்கு எதிராக பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கைகளை பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டுள்ளனா்.