Published by T. Saranya on 2021-01-29 17:02:45
நாட்டில் இன்று (29.01.2021) மேலும் 963 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 55,398 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை,61,586 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 5,891 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் 720 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 297 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.