இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துக்கு கோப் குழு என்ற அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

அதன்படி பெப்ரவரி 11 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை கோப் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி குறித்த விசாரணைகளுக்காகவே இந்த அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் கோப் குழுவிற்கு அழைக்கப்படவுள்ளது.

இதன்போது  இலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பிலான விசேட தணிக்கை அறிக்கை குறித்து கருத்திற்கொள்ளப்படும்.