(இராஜதுரை ஹஷான்)
சுங்க திணைக்களம் தொடர்பில் ஜனாதிபதி கூறிய விடயங்கள் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளன.
ஏனைய அரச திணைக்களங்களை காட்டிலும் சுங்க திணைக்களம் சிறந்த முறையில் செயற்படுகிறது. சுங்க திணைக்கள சட்டத்தை திடீரென திருத்த முயற்சிப்பதன் பின்னணி அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டதாக அமைய கூடாது என சுங்க திணைக்கள தொழிற்சங்க இணை செயலாளர் சுதத் டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எமது திணைக்களத்தை விட வேறெந்த திணைக்களத்திலும் தகுதியான அதிகாரிகள் இல்லை. சுங்க திணைக்களம் குறித்து ஜனாதிபதியின் கருத்துக்கு பின்னர் சுங்க திணைக்களத்தின் உள்ள அனைத்து அதிகாரிகளும் மோசமானவர்கள் என்ற எண்ணம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருக்கும்.
சுங்கத்தில் உள்ள அனைவரையும் துரத்தி விட்டு தான் இதை செய்யப்போவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதை பார்க்கும் போது சுங்கத்தில் சிறந்த அதிகாரிகள் இல்லை என்ற எண்ணம் ஏற்படலாம்.இதனால் சிறப்பாக செயற்படும் அதிகாரிகள் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளார்கள்.
ஜனாதிபதி கூறிய முழுமையான கருத்தில் எமக்கு எவ்வித முரண்பாடும் இல்லை.ஆனால் இதன் ஊடாக தவறான தீர்மானங்கள் எடுப்பதற்கு வழி உள்ளது.தடுக்க வேண்டும்.
ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறும் சிலர் வரி தொடர்பான தீர்மானங்களை எடுப்பவர்கள் சுங்க திணைக்களத்துடன் கலந்துரையாடி சரியானதை செய்வார்களாயின் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாது.
தொழிற்சங்கம் என்ற ரீதியில் சில யோசனைகள் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளோம். அந்த யோசனைகளை செயற்படுத்தினால் சுங்க திணைக்களம் மேலும் உயரிய இடத்துக்குச் செல்லும்.
எமது யோசனையின் பின்னர் ஜனாதிபதி செயலணியின் தலைவர் லலித் வீரதுங்கவின் தலைமையில் குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார்.
இறுதியில் அங்குமில்லாமல் இங்குமில்லாமல் 28 பேரைக் கொண்ட குழுவொன்றை நியமித்து கலந்துரையாடலை முன்னெடுக்க முடியாத நிலைக்கு வந்துள்ளது. இதை செய்தது யாரென ஜனாதிபதி ஆராய வேண்டும்.
சுங்க கட்டளைச்சட்டத்துக்கு அமையவே அதிகாரிகள் செயற்படுவர். யாருக்கும் அடிபணியாமல் சுயாதீனத்துடன் செயற்படுவர்.சுங்க அதிகாரிகள் அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு செவிசாய்க்கும் அரச அதிகாரிகள் இல்லை. அதனால் சுங்க கட்டளைச் சட்டத்தை மாற்றும் தேவை இதன் பின்னணியில் பலருக்கும் உள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM