(ஆர்.யசி)
இந்த ஆண்டில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதுடன், அதற்கமை சகல பல்கலைக்கழகங்களுக்கும் இவ்வாறு பத்தாயிரம் மேலதிக மாணவர்களை இணைத்துக்கொள்ளவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைகள் பழைய மற்றும் புதிய முறைமைக்கு அமைய நடத்தப்பட்டதனால் வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதில் பிரச்சினைகள் எழுந்துள்ள காரணத்தினால் இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்யும் விதமாகவும், மாணவர்கள் நிராகரிக்கப்படும் எண்ணிக்கை குறித்த பிரச்சினைகளை தீர்க்கும் விதமாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வுடனும், கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அமைச்சருடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாகவும், அதன் பின்னர் அமைச்சரவையிலும் இதற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளதுடன், இலங்கையின் வரலாற்றில் இதுவே அதிகளவான மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM