இலங்கையின் எதிர்காலம் இன்று உரிமைகளை மதித்து, கடந்த காலத்தை சமாளிக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுப்பதைப் பொறுத்தது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வெளியாகியுள்ள இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கை குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தனது டுவிட்டர் பதிவிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அத்துடன் அந்த டுவிட்டர் பதிவில், இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையை நாங்கள் கவனமாக பரிசீலித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.நா. அறிக்கையின் முழு விபரம்