வடகிழக்கு ஜோர்ஜியாவில் கோழி இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் திரவ நைதரசன் வாயுக் கசிவு ஏற்பட்டதால் 6 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

கெய்னஸ்வில்லி நகரில் உள்ள அறக்கட்டளை உணவுக் குழு தொழிற்சாலையில் நேற்று வியாழக்கிழமை நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து மேலும் 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோழி இறைச்சியை பதப்படுத்தி உற்பத்தி செய்யும் ஒரு முன்னணி மாநிலமாகும் ஜோர்ஜியா. அத்துடன் அங்குள்ள கெய்னெஸ்வில்லி

குறித்த நகரில் கோழி இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை செய்கிறார்கள்.

பிரைம் பாக் உணவுகள் என்று அழைக்கப்பட்ட இந்த தொழிற்சாலையில் வியாழக்கிழமை வாயுக் கசிவு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மொத்தம் 130 பேர் வைத்திய உதவிக்காக உள்ளூர் தேவாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் ஐந்து பேர் உயிரிழந்து கிடந்ததாகவும், ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் 3 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வடகிழக்கு ஜோர்ஜியா வைத்திய நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் பெத் டவுன்ஸ் தெரிவித்துள்ளார்.

மூச்சுத் திணறல் ஏற்பட்ட மூன்று தீயணைப்பு அதிகாரிகள் உட்பட காயமடைந்தவர்கள் பலர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடுதிரும்பியுள்ளார்கள்.