ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறமாட்டேன் : தேசிய அமைப்பாளர் பதவியை ஏற்க மாட்டேன் என்கிறார் நவீன்

Published By: Digital Desk 4

29 Jan, 2021 | 07:27 AM
image

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து ஒருபோதும் வெளியேறமாட்டேன். கட்சி முழுமையாக மறுசீரமைக்கப்படவில்லை. அதனால் வழங்கப்பட்ட தேசிய அமைப்பாளர் பதவியை ஏற்க முடியாது.

நாட்டில் தற்போது சிறந்த அரசாங்கமும், பலமான எதிர்க்கட்சியும் கிடையாது. ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து முன்னெடுப்போம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

நுவரெலியா நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கட்டிடத்தை  நீக்கியமையினால் 40 குடும்பங்கள் பாதிப்பு : நவீன் | Virakesari.lk

கொழும்பில் 28 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராகவும், செயற்குழுவின் உறுப்பினராகவும் செயற்படுவேன்.

ஐக்கிய தேசிய கடந்தவாரம் மறுசீரமைக்கப்பட்டு முக்கிய பதவிகளுக்கான புதிய உறுப்பினர் தெரிவு இடம்பெற்றது.கட்சியின் பதவி நிலையில் மாத்திரம் மாற்றம் ஏற்படுத்தினால் கட்சி அடைந்துள்ள பின்னடைவை  சீர்செய்ய முடியாது.

கட்சியின் தலைமைத்துவம் தொடக்கம் அனைத்து மட்ட பதவி நிலைகளும் மறுசீரமைக்கப்பட வேண்டும் என கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு  எழுத்து மூலமாக பல முறை தெரிவித்துள்ளேன்.

கட்சி முழுமையாக மறுசீரமைக்கப்படவில்லை. வழங்கப்பட்ட தேசிய அமைப்பாளர் பதவியை ஏற்க முடியாதுஎன தெரிவித்துள்ளேன்.

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து  குறுகிய காலத்துக்குள் மக்களின் வெறுப்பினை பெற்றுக் கொண்டுள்ளது. நாட்டில் தற்போது சிறந்த அரசாங்கமும் இல்லை.

பலமான எதிர்க்கட்சியும் இல்லை என நாட்டு மக்கள் கருதும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று  பலமான ஒரு எதிர்க்கட்சி அவசியமாகவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறாமல் பொறுமையாக செயற்பட்டிருந்தால் அவருக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் கிடைக்கப் பெற்றிருக்கும்.

பொதுத்தேர்தலின் பின்னர் இரு தரப்பினரும் ஒன்றினைந்து பலமான எதிர்கட்சியை ஸ்தாபித்திருக்கலாம்.

ராஜபக்ஷர்களின் பலவீனமான அரசாங்கத்தை தோற்கடிக்க அனைத்து தரப்பினரும் ஒன்றுப்பட வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராக செயற்பட்டு கட்சியை முன்னெடுத்து செல்லும் நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

பலம் வாய்த ஐக்கிய தேசிய கட்சியை நாட்டு மக்கள் புறக்கணிப்பதந்கான காரணம் என்ன ,தவறுகளை எவ்வாறு திருத்திக் கொள்ள வேண்டும் என்ற விடயங்கள் குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25