யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரின் விசேட சுற்றிவளைப்பின் போது போயா தினமான இன்றைய தினம் காலை 2 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு முச்சக்கர வண்டியும் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ளவர்கள் வட்டுக்கோட்டை ,மற்றும் திவிலிபிட்டிய பகுதியை சேர்ந்தவர்கள்.

மிகவும் சூட்சுமமான முறையில் கஞ்சா வியாபாரத்தை மேற்கொண்டு வந்த நபர்கள் தொடர்பில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து சுற்றிவளைக்கப்பட்டு யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கையில்  யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் ஈடுபட்டுள்ளார்கள்.