இலங்கை தேசிய கராத்தே தோ சம்மேளனத்தின்  தெரிவுக்குழு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சினால் தேசிய ரீதியாக ஐவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தலைவர் சென்செய்.ஜி.போல் ஜோசப், உறுப்பினர்களாக சென்செய். ரி.டி.தரங்க பெர்னான்டோ,  சென்செய்.அன்ரோ டினேஸ், சென்செய்.சி.ஜெ.சமரசேகர மற்றும் சென்செய்.பி. அனுர ரத்னதேவ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச மட்டத்தில் இடம்பெறும் கராத்தே சுற்று போட்டிகளுக்கான அணியினை தெரிவு செய்வது இவர்களது பிரதான கடமையாகும்.

No description available.No description available.No description available.No description available.No description available.