நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கறுப்பு பட்டி அணிந்து மாபெரும் அடையாள உணவு ஒறுப்பு போராட்டம் ஒன்றை எதிர்வரும் 2ஆம் திகதி ஆரம்பித்து  6ஆம் திகதிவரை நடாத்த போவதாக வடக்கு  கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் அறிவித்துள்ளது.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, வடக்கு  கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க தலைவி யோகராஜா கனகரஞ்சினி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய  முன்றலில் இடம்பெறும் மாபெரும் நீதிப் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் வடக்கு  கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின்  சங்கம் அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடதக்கது.