புத்தளம் பாலாவி சீமெந்து தொழிற்சாலையிலிருந்து சீமெந்து ஏற்றிச்சென்ற கனரக வாகனத்துடன் பாலாவி பகுதியிலிருந்து கல்லடி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின்போது, ஒருவர்  ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை  உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது வாகனத்தின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் மானவெரி சிறாமபையடி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரும், அட்டவில்லு பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவருமே என பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவர்களின் சடலங்கள் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.