இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான தனது உறுதியான உறுதிப்பாட்டை அமெரிக்கா மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.

மேலும் பிராந்தியத்தில் அமைதியை முன்னேற்றுவதற்காக இஸ்ரேலுடன் தொடர்ந்து பணியாற்றும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறினார்.

இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் காபி அஷ்கெனாசியுடனான அழைப்பில் பிளிங்கன், “ஆபிரகாம் உடன்படிக்கைகள்” மூலம் அண்மையில் அடைந்த முன்னேற்றத்தைப் பாராட்டினார்.

மேலும் அந்த முன்னேற்றத்தை மேலும் கட்டியெழுப்புவதில் அமெரிக்க ஆர்வத்தை உறுதிபடுத்தியதாக வெளியுறவுத்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சர் அஷ்கெனாசி மற்றும் செயலாளர் பிளிங்கன் ஆகியோர் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறுதியான பங்காளித்துவத்தை இதன்போது ஒப்புக்கொண்டனர், மேலும் இரு நாடுகளும் எதிர்வரும் சவால்களில் நெருக்கமாக இணைந்து செயல்படும் என்றும் உறுதியளித்தனர்.

ஆபிரகாம் உடன்படிக்கைகள் எனப்படுவது இஸ்ரேலுக்கும் அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை இயல்பாக்குவதற்கான அமெரிக்க தரகு ஒப்பந்தமாகும். 

கடந்த சில மாதங்களில், இஸ்ரேல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சூடான் மற்றும் மொராக்கோவுடன் ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக ஒப்பந்தங்களை எட்டியது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வெளியுறவுக் கொள்கையை ட்ரம்பின் "அமெரிக்கா முதல்" தோரணையில் இருந்து நகர்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ஜனநாயகக் கட்சி ஆபிரகாம் உடன்படிக்கைகளைத் தொடருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.