ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

28 Jan, 2021 | 01:05 PM
image

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி திறந்து வைத்தார்.

அதிமுகவின் பொதுச் செயலாளரும், 'அம்மா' என அன்புடன் அதிமுக தொண்டர்களால் போற்றப்படும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி மறைந்தார்.

அவரது உடல் சென்னை மெரினா கடற்கரை ஓரத்தில் எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது.

இவ்விடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு தீர்மானித்தது. இந்திய மதிப்பில் ஏறத்தாழ 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பீனிக்ஸ் பறவை போல் ஜெயலலிதாவின் நினைவிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாக்கப்பட்டது.

அண்மையில் இந்த பணிகள் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி இன்று அந்த நினைவிடத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் என ஏராளமானவர்கள் பங்குபற்றினர்.

இந்நிகழ்வில் பங்குபற்றி பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி,' தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம் அதிமுகவின் வெற்றியை ஜெயலலிதாவிற்கு சமர்ப்பணம் செய்வோம்' என குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35