சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராக இருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'டான்' என பெயரிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'டான்'. இதில் சிவகார்த்திகேயன் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

பிரம்மாண்டமான படங்களை தயாரித்த லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

இப்படத்தின் அறிவிப்பை மோஷன் போஸ்டர் மூலம் லைக்கா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இப்படத்தில் பணியாற்றும் ஏனைய தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லைகா நிறுவனம் தற்போது யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் ‘பன்னிக்குட்டி’,நடிகை திரிஷா கதையின் நாயகியாக நடிக்கும் ‘ராங்கி’ என்ற சிறிய  பட்ஜட் திரைப்படங்களையும், கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் ‘இந்தியன்=2’, மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ என பிரம்மாண்டமான பட்ஜட் படங்களையும் தயாரித்து வருகிறது.

இப்படங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எதிர்பார்ப்பைப் போலவே சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகவிருக்கும் ‘டான்’ படத்திற்கும் உருவாகியிருக்கிறது.