சுதந்திர சதுக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வாகன போக்குவரத்துக்கு தடை

Published By: Vishnu

28 Jan, 2021 | 11:07 AM
image

எதிர்வரும் ஜனவரி 30 முதல் பெப்ரவரி 4 ஆம் திகதி வரை சுதந்திர சதுக்கத்தை சுற்றிய பகுதிகளில் வாகன போக்குவரத்து தடை செய்யப்படும் என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

சுதந்திர தினத்திற்கான ஒத்திகை மேற்கண்ட காலப் பகுதியில் நடைபெறவுள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிருபமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.

இதன் விளைவாக, சுதந்திர சதுக்கத்தை அண்மித்த வீதிகள் மற்றும் இணைக்கும் வீதிகளினூடான போக்குவரத்து நடவடிக்கை தடைசெய்யப்படும்.  

ஒத்திகை நாட்களில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் சுதந்திர தினத்தன்று அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் இவ்வாறு போக்குவரத்து தடைசெய்யப்படும்.

இதேவேளை இந்த நாட்களில் தாமரைத் தடாகத்திற்கு அருகே வீதியின் ஒரு பகுதியும் போக்குவரத்துக்காக மூடப்படவுள்ளது.

இந்த காலகட்டத்தில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளதாவும் அஜித் ரோஹானா தெரிவித்தார்.

இதேவேளை இன்று நாடு முழுவதும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலாவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய ஆட்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வது குறித்து விசேட கவனம் செலுத்தப்படும்.

வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர், அதிக வேகமாக வாகனங்களைச் செலுத்துவோர், குடிபோதையில் வாகனங்களைச் செலுத்துவோர் போன்றவர்கள் கைது செய்யப்படுவார்கள். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

கொவிட் சுகாதார விதிமுறைகளை மீறும் வகையில் ஆசனங்களின் எண்ணிக்கையைவிட கூடுதலான பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் வண்டி உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27