படுகொலை என நம்­பப்­படும் பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் மர்ம மரணம் குறித்து முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் சார­தி­யாக கட­மை­யாற்­றிய இரா­ணுவ வீரர் ஒரு­வரை கைது செய்­வது தொடர்பில் அதி­கா­ரிகள் அவ­தானம் செலுத்­தி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

நார­ஹேன்­பிட்டி மற்றும் கிரு­லப்­பனை ப் பகு­தி­களில் இருந்து குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைப்பற்­றப்­பட்­டுள்ள சீ.சீ.ரி.வி. காணொ­ளிகள் தற் சமயம் கொழும்பு பல்­க­லையில் ஆய்­வுக்கு உட்­ப­டுத்தப் பட்­டுள்ள நிலை­யி­லேயே பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் இதனை தெரி­வித்­தன.

குறித்த வீடியோ காட்­சியில் மஹிந்­தவின் முன்னாள் சார­தி­யான குறித்த இரா­ணுவ வீரர் துப்­பாகி ஒன்­றுடன் தோன்­று­வது போன்ற காட்­சிகள் உள்­ள­தா­கவும் இந் நிலை­யி­லெயே அடுத்து வரும் சில நாட்­களில் அவர் கைதுச் செய்­யப்­ப­டலாம் எனவும் அந்த தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

குறித்த சாரதி, தாஜூ­டீனை ரி.56 ரக துப்­பாக்­கியில் தாக்­கு­வது பாது­காப்பு கெம­ராவில் தெளி­வாக பதி­வா­கி­யுள்­ள­தா­கவும் தாக்­கப்­பட்ட தாஜூடீன் மார்பை பிடித்து கொண்டு கீழே விழு­வதும் , அப்­போது அவர் அருகில் இருந்து விலகிச் செல்லும் அச்­சா­ர­தியின் கையில் இரத்தம் படிந்த ரம்போ ரக கத்தி இருப்­ப­தையும் தெளி­வாக காணக் கூடி­ய­தாக உள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் இந்த கொலைக்கு உத­வி­ய­வர்­களும் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இந் நிலை­யி­லேயே மஹிந்­தவின் முன்னாள் சார­தி­யான குறித்த நபர் இடை நடுவே அந்த பணியில் இருந்து நீக்­கப்­பட்டு திரு­கோ­ண­ம­லைக்கு முகா­முக்கு இட­மாற்­றப்­பட்­ட­தா­கவும் பெரும்­பாலும் இந்த வாரத்தில் அவ­ரது கைது இடம்­பெ­றலாம் எனவும் பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் சுட்­டிக்­காட்­டின.

எவ்­வா­றா­யினும் கொழும்பு பல்கலைக்கழைகத்தின் ஆய்வின் பின்னர் எதிர்வரும் 10 நாட்களுக்குள் சீ.சீ.ரி.வி.காணொளி குறித்த அறிக்கை மன்றுக்கு வழங்கப்படலாம் என தெரிகின்றது.