Published by T. Saranya on 2021-01-27 22:36:48
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி தலைவரும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு அவருக்கு உடல் நிலை அசவுகரியம் ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் கொல்கத்தா அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக மிதமான மாரடைப்பு ஏற்பட்ட சவுரவ் கங்குலி இந்த மாத தொடக்கத்தில் கொல்கத்தா உட்லேண்ட்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு நலமாக வீடு திரும்பினார்.
இருதயத்துக்கு இரத்தம் செல்லும் குழாய்களில் 3 அடைப்பு இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை அவருக்கு நடத்தப்பட்டு ஸ்டெண்ட் வைக்கப்பட்டது.