கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக நெல் அறுவடையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதோடு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவும் நியாயமற்ற விலையில்  மேற்கொள்ளப்படுகிறது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தற்போது கால போக நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் பெருபாலான விவசாயிகளுக்கு அறுவடையில் பாரிய வீழ்ச்சி  ஏற்பட்டுள்ளது.

சில விவசாயிகளுக்கு உற்பத்தி செலவை கூட பெற்றுக்கொள்ள முடியாதளவில் அறுவடை காணப்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, நெல் கொள்வனவில் ஈடுப்படுகின்ற தனியார் நிறுவனங்களும்  நியாயமற்ற விலையில் கொள்வனவை மேற்கொள்வதாவும்,  வேறு வழியின்றி விவசாயிகளும் கொள்வனவாளர்களின் விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் விவசாயிகளினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.