மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழூர் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலை ஒன்றிலிருந்து நேற்று செவ்வாய்கிழமை (26.01.2021) மாலை பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நீர் நிலையில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கமைய அங்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர்.

கடந்த 23.01.2021 அன்று, சனசமூக வீதி மகிழூரைச் சேர்ந்த பெண் ஒருவர்  காணாமல் போயுள்ளதாக, குறித்த பெண்ணில் உறவினர்கள் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கமைய காணாமல் போன பெண் நீர் நிலையில் உயிரிழந்த நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளார்.

 இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், ஒரு பிள்ளையின் தாயான 40 வயதுடைய யோகராசா புஸ்ப்பலதா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.